அண்ணனை பழிவாங்க நினைத்த வாலிபர்கள்… தங்கைக்கு ஏற்படுத்திய பயங்கரம்…

பாகிஸ்தானில் அண்ணன் செய்த தவறுக்காக தங்கச்சியை அரை நிர்வாணமாக வீதியில் நடக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் சௌத்வான் நகரின் அருகாமையில் அமைந்திருக்கும் கிராமத்தில் தான் இந்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது

தண்ணீர் எடுப்பதற்காக தோழிகளுடன் 16 வயது சிறுமி சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த சில வாலிபர்கள் சிறுமியை அடித்து துன்புறுத்தியதோடு உடையை கத்தரிக்கோலால் வெட்டி அரை நிர்வாணமாக மாற்றியுள்ளனர்.

அதன் பின்னர் வீதியில் நடுவே நடக்க வைத்துள்ளனர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட தாய், அந்த வாலிபர்களிடம் சண்டையிட்டுள்ளார்.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், பொலிசார் சிறுமியிடம் தவறாக நடந்த 8 வாலிபர்களை கைது செய்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது, சிறுமியின் அண்ணன் சில வருடங்களுக்கு முன்பு அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தது மட்டுமின்றி செல்போன் ஒன்றும் பரிசாக கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் பெண் வீட்டாருக்கு தெரியவரவே ஊர் பெரியவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து பெண்ணுக்கு செல்போன் வாங்கி கொடுத்தற்காக இளைஞருக்கு ரூ.3 லட்சம் அபராதம் கட்ட வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

அந்த வாலிபரும் அபராத தொகையை கட்டியுள்ளார். இந்த சம்பவம் நடந்து 3 வருடங்களுக்கு மேலாகியும் அதனை மறக்காத பெண் குடும்பத்தார், வாலிபரை பலிவாங்க தங்கச்சியை இப்படி செய்துள்ளதாக கைதான வாலிபர்கள் ஒப்புக்கொண்டனர்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *